திமுகவுக்கு குடும்பம்தான் ஆட்சி. கருணாநிதி அவருக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி என்று திமுகதான் குடும்ப அரசியலை நடத்தி வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசுகையில்: விவசாயிகளின் துன்பம், விவசாயியான எனக்கு தான் தெரியும். விவசாயிகளின் இன்னல்களை போக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது. விவசாயிகளின் குறைகளை கண்டறிந்து, துயர்களை அரசு நீக்கியது. விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்காத அரசு திமுக. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திமுக அரசு தான் கொண்டு வந்தது.
அதனை அதிமுக அரசு தான் தடுத்து நிறுத்தியது. ஆட்சியை கவிழ்க்க நினைப்பது, கட்சியை உடைக்க நினைப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களை ஸ்டாலின் செய்தார். நிர்வாகிகள், தொண்டர்கள் பேராதரவுடன் திமுக தீட்டிய சதித்திட்டங்களை முறியடித்தோம். திமுகவுக்கு குடும்பம்தான் ஆட்சி.
கருணாநிதி அவருக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி என்று திமுகதான் குடும்ப அரசியலை நடத்தி வருகிறது. நீங்கள் என்ன அரச பரம்பரையா, திமுகதான் ஊழல் கட்சி. ஊழல் என்ற வார்த்தை உருவானதே திமுக ஆட்சியில்தான். நாங்கள் செய்ததை சொல்கிறோம்.
செய்யப்போவதை சொல்கிறோம். வீராணம், பூச்சி மருந்து ஊழல், அரிசி ஊழல். இவை எல்லாம் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது. மேலும், இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது.
அரசின் நிர்வாக திறமையால், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. ஏழை மக்கள் உயர்கல்வி படிக்க கல்லூரிகள் அமைத்து கொடுத்தது அதிமுக அரசு. அதிமுக அரசு தள்ளுபடி செய்த விவசாய கடனை, திமுக எப்படி மீண்டும் தள்ளுபடி செய்யும். அதிமுக அரசு மக்களுடைய அரசு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.