Type Here to Get Search Results !

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சைக்கிள் ரிக்ஷா ஓட்டி அசத்தியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

தேர்தல் பிரச்சாரத்தை ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு வகையில் செய்வார்கள். டீ கடைக்கு போவது, பேரணியாக போவது, ஏன்.. டீ போட்டு கொடுப்பது வரை ஒவ்வொரு வேட்பாளர்களும் ஒவ்வொரு வகை.

இதில் ஜெயக்குமார் தனி ரூட்டை கையில் பிடித்துள்ளார். ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம் தொகுதி, பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் வாழும் இடம்.


ரிக்ஷா ஓட்டிய ஜெயக்குமார்

இதற்கு ஏற்ப ரிக்ஷா பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார் அமைச்சர்.

ஆம்.. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் பொழுது, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, ரிக்ஷா வாகனத்தை ஓட்டி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார் அமைச்சர் ஜெயக்குமார். பின்னணியில் எம்ஜிஆர் திரைப் பாடல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தன.

ஏய்.. ஜோர்ரா சொல்லு, அழுத்திச் சொல்லு

அப்போது, ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் வித விதமாக கோஷம் எழுப்பினார்கள். நமது சின்னம்.. என்று ஒருவர் கோஷம் போட, கூட்டமே சேர்ந்து, ரெட்டை இலை.. என்று பதில் கோஷம் எழுப்பியது. போடுங்கம்மா ஓட்டு.. ரெட்ட இலையை பார்த்து.. என்ற கோஷமும் எதிரொலித்தது. கூட்டத்தில் ஒருவர், “ஜோர்ர்ரா சொல்லு..” என கோஷம் போட, மற்றவர்கள் ரெட்டை இலை என்றனர். அதே நபர், “அழுத்திச் சொல்லு..” என கோஷம் போட கூட்டமே சேர்ந்து ரெட்டை இலை என்று கூறியது.

காப்பியடிக்கும் திமுக

இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய ஜெயக்குமார், கூறியதை பாருங்கள்: காப்பி அடிக்கும் பசங்களுக்கு காப்பி அடிக்கும் புத்திதான் வரும். திமுக படிக்காத பையனை போன்ற கட்சி. அதனால் காப்பியடிக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. பணி நிமிர்த்தமாக ஓபிஎஸ் விசாரணை ஆணையத்திற்கு செல்லாமல் இருக்கிறார். ஆனால் அவர் செல்லாமலே இருக்க முடியாது. ஜெயலலிதா மரணத்தில் தொடர்புடையவர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெறுவர் என்பது உறுதி.

ரவுடி ராஜ்ஜியம்

பிரியாணி கடை, சாலையோர வியாபாரிகள், பியூட்டி பார்லர் போன்றவர்களிடம் அராஜகம் செய்கிறது திமுக. ஆட்சிக்கு வரப் போவதில்லை. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே அராஜகமாக பேசியிருக்கிறார் செந்தில் பாலாஜி. எதிர்க்கட்சியா இருக்கும் பொழுதே அதிகாரிகளை மிரட்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ரவுடிகளின் ஆட்சியாக மாறிவிடும். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.