வரும் 2024ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையமான நாசா, அமெரிக்க கருப்பினத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவரை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த ஜனவரி 20ம் தேதி அமெரிக்க தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் மாபெரும் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். மேலும் இந்திய மற்றும் அமெரிக்க பூர்வீகம் கொண்ட கருப்பின பெண்ணான கமலா ஹாரிஸ், துணை அதிபராகப் பதவி ஏற்றார்.
முந்தைய டொனால்ட் டிரம்ப் ஆட்சிகள் அமெரிக்கா வெள்ளையர்களுக்கு என்ற கொள்கை நீடித்து வந்த நிலையில் தற்போது ஜனநாயக கட்சியின் ஆட்சியில் பிறநாட்டு குடியேறிகளுக்கும், அமெரிக்க கருப்பின மக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில் செவ்வாய் கிரகத்தில் பேர்சிவேரன்ஸ் ரோவரை வைத்து சோதனை செய்து வருகிறது. வரும் 2024ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி ஓடம் ஒன்றை அனுப்ப நாசா விஞ்ஞானிகள் தற்போது திட்டமிட்டு வருகின்றனர்.
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரது அறிவுறுத்தலின்படி இந்த முறை கருப்பின பெண் விஞ்ஞானி ஒருவரை நிலவுக்கு அனுப்பலாம் எனத் தீர்மானித்துள்ளனர். இதன்மூலமாக அமெரிக்காவில் தலைசிறந்து விளங்கும் கருப்பின விஞ்ஞானிகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று ஜனநாயக கட்சி நினைக்கிறது. ஜோ பைடனின் இந்த முடிவு அமெரிக்க கருப்பின மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.