Type Here to Get Search Results !

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்… எடப்பாடியார் அதிரடி

 

பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் முறையாக சோப்பு போட்டு அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.