Type Here to Get Search Results !

கருவறைக்குள் தூணினுடைய நிழல் விழும் அதிசய கோயில்

 
ஐதராபாத்திலிருந்து 100 கி.மி. தொலைவில் தெலுங்கானா மாநிலம் நல் கொண்டா அருகில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது சாயா கோமேஸ்வரர் கோயில் . ரோமேஸ்வரர் என்பது இங்குள்ள சிவலிங்கத்தின் பெயராகும். சாயா என்பது நிழலை குறிக்கும்.

இவர் மேல் விழும் நிழலால் சாயா சோமேஸ்வரர் என்ற பெயர் இவருக்கு வந்தது . இக்கோயில் குண்டூர் சோழர்கள் கட்டியது . இங்கு கருவறை எங்கும் இல்லாதவாறு மூன்று கருவறைகள் ஃ வடிவில் அமைந்துள்ளன. இந்த கோயிலின் கல்வெட்டு தகவல்கள் கோயில் கருவறை பிரம்ம கரு வரை என்றும் 2 லங்க கருவறை என்றும் முன்றாக அமைந்துள்ளதை சுட்டிக் காட்டுகிறது . இங்கு விழும் மர்ம நிழலுக்கு இந்த வடிவமே காரணமோ என்று நினைக்க தோன்றுகிறது .

அறிவியலின் படி எந்த ஒரு பொருளின் மீது சூரிய ஒளி பட்டாலும் அந்த பொருளின் நிழல் அதற்கு முன்பு விழும் பின் சூரியன் நகர நகர அந்த நிழலும் நகரும் . ஆனால் இந்த கோயிலில் லிங்க கருவறையில் லிங்கத்தின் பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது . ஆனால் காலையில் எந்த இடத்தில் இந்த நிழல் இருந்ததோ சூரியன் மறையும் வரை அதே இடத்தில் இருக்கிறது. இந்த நிழல் சூரியனின் நகர்விற்கேற்ப நகர்வதில்லை .

இந்த கருவறைக்கு முன் நான்கு தூண்கள் உள்ளன இதில் எந்த தூணின் நிழல் கருவறைக்குள் விழுகிறது என்று தெரியவில்லை. எந்த தூணின் பின் நின்றாலும் நம் நிழல் விழாமல் தூணின் நிழலே விழுகிறது . ஆனால் பிரம்ம கருவறைக்கு முன் நின்று பார்த்தால் பிரம்மனுக்கு நான்கு தலை என்பதை சொல்லும் விதமாக நம் நிழல் நான்காக விழுகிறது அதுவும் எதிர் திசையில் விழுகிறது .

இது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது . இந்த கோயிலுக்கு எதிரில் ரங்க மண்டபம் என்ற அர்த்த மண்டபம் உள்ளது . இந்த மண்டபத்தில் தூண்களை கொண்ட ஆச்சர்யமான சிற்ப வேலை பாடுகள் உள்ளன இது நேரடியாக சூரிய ஒளி படுமாறு அமைந்துள்ளது. இதில் பட்டு வரும் சூரிய ஒளியே கருவறைக்குள் இந்த நிழல் அதிசயத்தை ஏற்படுத்துவதாக நம்புகிறார்கள்.

சூரியனின் மனைவியான சாயா தேவி இந்த தலத்தில் வழிபட்டதாக புராணம் செய்திகள் கிடைக்கின்றன . சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கோயில் முக்கோன வடிவிலும் கருவறை விமானம் பிரமிடு அமைப்பிலும் கட்டப்பட்டு உள்ளது .

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.