தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 95 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று பிரசாந்த் கிஷோர் தனது நண்பர்கள் குழுவிடம் பேசியது போன்ற ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
மூக ஊடகங்களில்பரவி வரும் திமுக தொடர்பான செய்திக்கு இதுவரை யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. பிரசாந்த் கிஷோர் போனில் பேசியதாக கூறப்படும் இந்த விஷயம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் முடிந்தவுடன் திமுக கூட்டணி 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்று கூறிய பிரசாந்த் கிஷோர், இப்படி திமுகவின் வெற்றி வாய்ப்பை குறைத்து மதிப்பிட்டு கூறி இருப்பாரா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஐபேக் சொன்னதாக கூறப்படும் கணக்கின்படி பார்த்தால் அதிமுக கூட்டணி 135 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும் என்பது தெளிவாகிறது.
தேர்தல் நடப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்பாக எடுத்த சில கருத்துக் கணிப்புகளும், தேர்தலுக்குப் பின்பு எடுக்கப்பட்ட Exit Poll கருத்துக் கணிப்புகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
இந்தக் கணிப்புகள் எல்லாமே அதிமுக கூட்டணி 131 முதல் 134 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கூறுகின்றன. அதேபோல் தமிழக உளவுத் துறை எடுத்த சர்வேயில், அதிமுக கூட்டணிக்கு 142 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படு இருக்கிறது.
எனவே தமிழக தேர்தல் நிலவரம் குறித்து பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததாக சொல்லப்படும் கருத்து உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.